‘கல்யாணம் ஆன 2 -ம் நாள் காணமல் போன மனைவி’.. தேடிச் சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 26, 2019 08:40 AM

ஹரியானவில் திருமணம் ஆன இரண்டாம் நாள் மணப்பெண் காணமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man allegedly duped on pretext of marriage in Haryana

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதனால் சுரேந்தரின் குடும்பத்தார் அவருக்கும் மற்றொரு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் தரகர் ஒருவர் மூலம் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். தரகர் ஜிந்த் என்ற பகுதியில் ஒரு பெண் இருப்பதாக சுரேந்தரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார். இதற்காக அவர்கள் தரகருக்கு ரூ.70,000 கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து பெண் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர். இதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்ததும் கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் திருமணமான இரண்டாவது நாள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக லூதியானா செல்வதாக சுரேந்தரின் மனைவி கூறியுள்ளார். இதனால் சுரேந்தர் அப்பெண்ணை ரயில் ஏத்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் வீடு திரும்பாததால், மனைவியைத் தேடி அப்பெண்ணின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது சுரேந்தருக்கு ஒரு அதிர்ச்சி காந்திருந்துள்ளது. இந்து பெண் எனக்கூறி திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் வீட்டாரும், தரகரும் சேர்ந்து மிரட்டி சுரேந்தரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேந்தர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Tags : #MARRIAGE #WIFE #MIDDLEMEN #HARYANA