‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை’... ‘சைக்கோ இளைஞரின் பகீர் வாக்குமூலம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 21, 2019 01:48 PM

9 மாத கைக்குழந்தையை இளைஞரான சைக்கோ ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 month old baby from next to sleeping parents, rapes and kills her

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியில் உள்ள அனுமகோண்டாவில் உணவு விடுதி வைத்து நடத்திவருபவர்கள் ஜெகன்-அர்ச்சனா தம்பதியினர். இவர்கள் கடந்த புதன்கிழமையன்று, அவர்களது 9 மாத குழந்தையுடன் உணவு விடுதியின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென்று முழித்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனையடுத்து ஜெகன், வீட்டின் அருகே பல இடங்களில் தேடி அலைந்துள்ளார்.

இந்நிலையில், டைலர் தெருவில் ஒரு வீட்டின் மறுபுறம், குழந்தையின் அழுகுரல் கேட்டு, அங்கு சென்று பார்த்தனர். அப்போ பிரவீன் என்ற 28 வயதான இளைஞர், ஜெகனின் குழந்தையை வலுக்கட்டாயமாக, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஜெகன் அங்கு செல்வதற்குள் பிரவீன் தப்பியோடியுள்ளார். பின்பு ரத்தக்காயங்களுடன் காணப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிரவீனைத் தேடிக் கண்டுபிடித்த பொதுமக்கள், அவரை அடித்து உதைத்து அனுமகொண்டா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின்கீழ் பிரவீனை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் ஒரு சைக்கோ என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே பல பெண்களை பாலியல்  வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #CHILDABUSE #MURDER #TELANGANA