‘பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 10, 2019 04:37 PM
நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி 211 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் ரிசர்ஸ்வ்டே முறைப்படி பாதியில் நின்ற போட்டி இன்று மீண்டும் தொடங்கியது. இதில் 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது.
இப்போட்டியின் 49 ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து வீரர் லாதம் தூக்கி அடித்தார். அப்போது பவுண்ட்ரி லைனில் நின்றுகொண்டிருந்த ஜடேஜா அற்புதமாக கேட்ச் பிடித்து லாதமை அவுட்டாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#IndvNZ pic.twitter.com/yl0jkg7q6W
— Rohit Chaudhary (@CodeRohit) July 10, 2019
