'ஹேப்பினஸ் என்பது'.. 'மைதானத்திலேயே நிகழ்ந்த'.. 'நெகிழ்ச்சியான சம்பவம்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 21, 2019 05:33 PM

திருமணம் என்னதான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பலர் நம்பினாலும், அது நிகழும் இடமும் தருணமும்தான் பலருக்கும் எதிர்பார்ப்புடன் இருக்கும்.

Mans Proposal to a girl During INDvsPAK - Worldcup2019

அந்த கடவுளை விடவும் பெரியவன் என்று பூமியில் உள்ளவன் எவன்? பெண் கண்களை பார்த்து காதலைச் சொல்லும் தைரியம் உள்ளவன் அவன் என்று வைரமுத்து சொல்வது போல, பிடித்த ஒருவரை புரொபோசல் செய்வதே பெரிய விஷயம்.

அதுவும், அந்த புரொபோசல் எவ்விதமாக, எத்தகைய இடத்தில்? எத்தகையதொரு தருணத்தில் நிகழ்கிறது என்பதுதான் ஒரு தம்பதியரின் பல ஆண்டு கால நினைவலைகளில் அந்த நிமிடங்கள் மட்டும் தங்கிவிடுகின்றன. அப்படித்தான் இந்தியா-பாகிஸ்தான் மேட்சின் போது கிரவுண்டிலேயே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தனது காதலிக்கு புரொபோஸ் செய்கிறார்.

அந்த பெண்ணும், நெகிழ்ச்சியில் செய்வதறியாது தவிக்க, பின் இருவரும் அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஸ்டேடியத்தின் பவிலியனில் அமர்ந்திருக்கும் அனைவரின் ஆரவாரத்திற்கு நடுவில் இந்த தம்பதியினர் இந்தியா-பாகிஸ்தான் என்கிற மறக்க முடியாத வரலாற்று மேட்ச் நடக்கும்பொழுது, காதலர்களாக கரம் பிடித்துள்ளனர்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #INDVPAK #MARRIAGE #LOVE