‘வீக் எண்ட் பொழுதுபோக்காக தங்கம் தேடும் ஊர்மக்கள்..!’ 1.4 கிலோ தங்கம் எடுத்த அதிர்ஷ்டகாரர்..?
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | May 22, 2019 01:04 PM
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில் சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு ஒருவர் 1.4 கிலோ எடை கொண்ட தங்கத்தை எடுத்துள்ளார்.
எடுத்தவருடைய பெயர் வெளியாகாத நிலையில், அந்தத் தங்கக் கட்டியின் புகைப்படத்தை உள்ளூரிலுள்ள கடை ஒன்று இணையத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 45 செ.மீ ஆழத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட அதன் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 48 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர் தங்கம் தேடுவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. அவர் மட்டுமல்ல அந்தப் பகுதியில் பலரும் வார இறுதியில் பொழுதுபோக்காக தங்கம் தேடுதலில் ஈடுபடுகின்றனராம்.
ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் நான்கில் மூன்று மடங்கு தங்கம் கல்கூர்லி எனும் இந்தப் பகுதியிலிருந்தே எடுக்கப்படுகிறது. இங்கு சிறியளவில் தங்கம் கிடைப்பது மிகவும் சாதாரணம். இந்தப் பகுதியில் தங்கம் தேடுவதையே முழுநேர வேலையாகக் கொண்டவர்களும் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.