‘அவங்கள நாங்க பாத்துக்குறோம்!’.. பவன் கல்யாணின் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்‌ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 30, 2020 11:43 PM

இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கும் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

TN CM EdappadiPalaniswamy reacts over Actor Pawan Kalyans request

அதில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்திற்குட்பட்ட கோலகண்டி கிராமத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள்  தேவையான உணவோ, தங்கும் வசதியோ இல்லாமல் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதாகவும், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக  இந்த நிலைக்கு ஆளாகியுள்ள அவர்களுக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குப் போதுமான  தேவையான தங்குமிடவசதி மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் இந்த மீட்பு நடவடிக்கை பற்றிய தகவலை, அந்த 99 மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படியும்  ஆந்திரப் பிரதேசத்துக்கு உட்பட்ட ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்வதாக பவன் கல்யாண் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.இந்நிலையில் இதுபற்றி கூறியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இதுகுறித்து விரைவாக செயல்படுமாறு

சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : #EDAPPADIKPALANISWAMI #CORONA #CORONAVIRUS #PAWANKALYAN #FISHERMEN