VIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா!”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்!’.. ‘வைரல் வீடியோ!’

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Mar 30, 2020 11:26 PM

உலகையே  அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா கிடுகிடுவென பரவி வரும் வேளையில், வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வருபவர் எப்படி மீண்டும் வீட்டுக்குள் வரவேண்டும் என்று இளம் பெண் ஒருவரின் குடும்பத்தினர் விளையாட்டாக பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.

funny corona awareness video goes viral on social media

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றுவதால் பரவக்கூடியது என்பதால், மனிதர்கள் சமூக விலகல், சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட முறைகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி வெளியில் சென்றால் மாஸ்க் அணிவதும், இன்னொருவரிடம் இருந்து 3 அடி தள்ளியே இருத்தல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் இயல்பாகவே பழகிவிட்டனர்.

இந்நிலையில், இந்த சமூக விலகல் மற்றும் சமூக இடைவெளியின் அவசியம் புரியாமல் விழிப்புணர்வு அற்று இருப்பவர்களுக்காக ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. எந்த வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என தெரியாத இந்த வீடியோவில் கடைத்தெருவுக்கு சென்றுவரும் பெண் ஒருவரிடம் இருந்து அவர் எடுத்து வரும் பையை குச்சியை நீட்டி பெற்றுக்கொண்ட பெற்றோர், அந்த பெண்ணின் மீது சோப்புநீரை ஊற்றுகின்றனர்.

அந்த பெண்ணோ, தன் வீட்டு வாசலில் நெடுஞ்சாண்கிடையாக படுத்துவிட, அப்போதும் அப்பெண் மீது சோப்புநுரையை ஊற்றி புளோர் துடைக்கும் ப்ரஷ் துடைப்பம் கொண்டு அப்பெண்ணை சுத்தம் செய்து மீண்டு தண்ணீர் ஊற்றுகின்றனர். கொரோனாவின் தாக்கம் இந்த அளவுக்கு இருப்பதால் இப்படி எல்லாம் செய்ய வேண்டியுள்ளது என்பது போல் விளையாட்டாக இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.