'இந்த மாதம் யாரும் வாடகை வாங்க கூடாது...' கட்டாயப்படுத்தும் வீட்டு ஓனர் மீது கடும் நடவடிக்கை...' தமிழக அரசு வெளியிட்ட அரசாணை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 31, 2020 04:51 PM

வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

Tamil Nadu government announces ban on rent for a month

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை அறிவித்தது மத்திய அரசு.

தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தபடும் இந்த ஊரடங்கால் சிறு குறு தொழில்கள் முதல் ஐ.டி துறை வரை அனைத்து நிறுவனங்களும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே தங்களின் வேலையை செய்யுமாறு தமிழக அரசு வலியுத்தியுள்ளது.

தற்போதைய சூழல் மாத சம்பளத்தில் குடும்பம் நடத்துபவர்களும், அன்றாட தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து பணிபுரியும் கூலி தொழிலாளர்களையும் பெரிதும் பாதித்துள்ள இந்நிலையில் தமிழக அரசு தற்போது ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில், 'தமிழகத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடம் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் ஒரு மாத வாடகை வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையானது வடமாநிலத்தவருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி வாடகை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போதைய சூழலில் யாரையும் வீட்டை காலி செய்யுமாறும் வற்புறுத்தக் கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

அதேபோல்,  அனைத்து நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு எந்த வித பிடித்தமும் இன்றி சம்பளம் வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணை பெரும்பாலான மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #HOMERENT