'கிரகணம் இருக்கு'...'கொஞ்சம் பொறுத்துக்க ராசா'...'தாய் செய்த கொடுமை'...நடுங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 26, 2019 03:58 PM

சூரிய கிரகணத்தின் போது சிறுவர்களின் தாய்மார்களே, அவர்களை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

Kids buried till neck level during solar eclipse in Kalaburagi karnata

நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று தெரிந்தது. இதனால் அதுகுறித்த பல்வேறு வதந்திகளும் மக்களிடையே பரவின. குறிப்பாக கிரகணம் ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது என சில ஜோதிடர்கள் கூறினார்கள். அதே போன்று குறிப்பிட்ட ராசி காரர்களுக்கு கிரகணம் ஆபத்தாக இருக்கும் எனவும் கூறினார்கள். ஆனால் இதற்கு எல்லாம் அறிவியல் பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லை என, அறிவியலாளர்கள் மறுப்பு தெரிவித்தார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின் போது 10 வயதுக்கு உட்பட சிறுவர்கள், கழுத்தளவு மண்ணில் புதைத்த வைக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த மாநிலத்தின் கல்புர்கி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், சூரிய கிரகணம் ஏற்படும் போது சிறுவர்களை இவ்வாறு புதைத்து வைக்கும் போது அவர்களுக்கு தோல் நோய், மற்றும் உடல் ஊனம் போன்றவை ஏற்படாது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், சிறுவர்கள் அழுது கொண்டிரும்போது அவர்களின் தாய்மார்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சிறுவர்களின் உயிரோடு விளையாடுகிறது என சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #KARNATAKA #BURIED #NECK LEVEL #SOLAR ECLIPSE #TAJSULTHANPUR #KALBURGI