நான் அவுட் இல்ல... அடம்பிடித்த இளம் வீரர்... அம்பயருடன் வாக்குவாதம்... 10 நிமிடங்கள் நின்றப் போட்டி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 03, 2020 11:20 PM

ராஞ்சி போட்டியில் வளரும் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் நடுவருடன் களத்தில் வாக்குவாதம் செய்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Controversy: Shubman Gill Abuses Umpire in Ranji Trophy

பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் மொஹலியில் இன்று நடைப்பெற்று வந்தது. நிதிஷ் ராணா தலைமையிலான டெல்லி அணியும் மந்தீப் சிங் தலைமையிலான பஞ்சாப் அணியும் ஆடிவந்தன. இந்தப் போட்டியில், இந்திய A அணியின் கேப்டனும், பஞ்சாப் வீரருமான ஷுப்மன் கில் 10 ரன்களில் இருந்த போது ஷுபோத் பாட்டி என்பவர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக கள நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் பந்து பேட்டில் படவில்லையென ஷுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார். மேலும் நடுவர் முகமது ரஃபியிடம் தவறான வார்த்தைகளால் வாக்குவாதமும் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்கொயர் லெக் அம்பயருடன் ஆலோசனை நடத்தி ஷுப்மன் கில் தொடர வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் கடுப்பான டெல்லி வீரர்கள் உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

பிறகு ஆட்ட நடுவர், டெல்லி வீரர்களைச் சமாதானப்படுத்தினார். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் இவ்வளவு சண்டையிட்டு நடுவர் தீர்ப்பை மாற்றிய ஷுப்மன் கில், அதன்பிறகு சோபிக்காமல் 23 ரன்களில் வெளியேறினார். இந்தச் சம்பவங்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளதால், ஷுப்மன் கில் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : #CRICKET #SPORTS