டெல்லியில் பரபரப்பு... பிரதமர் மோடி இல்லத்தின் வளாகத்தில்... திடீர் தீ விபத்து...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 30, 2019 09:51 PM

டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.

Minor Fire At PM Modi\'s Residence In Delhi Around 7.30 PM

டெல்லியில் லோக் கல்யான் மார்க் பகுதியில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் தான் தற்போது பிரதமர் மோடி தங்கியிருக்கிறார். இந்நிலையில், இந்த இல்லத்தில் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் இருந்த தீ விபத்து என்பதால், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், ‘லோக் கல்யான் மார்க் பகுதியிலுள்ள பிரதமர் இல்லத்தில் மின்கசிவு காரணமாக சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அது பிரதமர் மோடி தங்கும் பகுதியிலோ அவரது அலுவலக பகுதியிலோ தீ விபத்து ஏற்படவில்லை. ஆனால், சிறப்பு பாதுகாப்பு படையின் (SPG) வரவேற்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்து உடனே கட்டுப்படுத்தப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : #NARENDRAMODI #FIRE #RESIDENCE