இனி 'இந்தியா' டீம் பெர்பார்மன்ஸ் வெறித்தனமா இருக்கும் ... தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ... மீண்டும் அணியில் இணைந்த வீரர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 08, 2020 06:24 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் இந்திய அணியில் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

BCCI releases the Indian team squad against South Africa series

ஐ.பி.எல் போட்டி தொடருக்கு முன்னதாக இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய மண்ணில் ஆடவுள்ளது. தர்மசாலா (12 ஆம் தேதி), லக்னோ (15 ஆம் தேதி), மற்றும் கொல்கத்தா (18 ஆம் தேதி) ஆகிய பகுதிகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்து மாதங்கள் ஓய்வில் இருந்து வந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில தினங்களுக்கு முன் நடந்த டி 20  தொடர் ஒன்றில் இரண்டு சதங்களை அடித்து சிறந்த பார்மில் உள்ள நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மேலும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சில தொடர்களில் ஆடாமல் இருந்து வந்த பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் : ஷிகர் தவான், ப்ரித்விஷா, ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா  ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில்.

Tags : #IND VS SA #SHIKHAR DHAWAN #HARDIK PANDYA #BHUVANESHWAR KUMAR