இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
2. நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.லோக்சபாவில் நன்னடத்தை விதி மீறியதாக கவுரவ் கோகை, டி.என்.பிரதாபன், தீன்கொரியா கோஷ், உன்னிதன், மாணிக்கம் தாக்கூர், குர்ஜித்சிங், பென்னி ஆகிய 7 காங்கிரஸ் எம்.பி.,க்களை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார்.
4. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட கலவரம் குறித்த வீடியோவை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
5. கொரோனா பீதி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் மார்ச்-31ம் தேதி வரை பள்ளிகளை மூட டில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
6. பி.எப்., எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7. இந்தியாவில் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பிச் சென்று கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை 5வது முறையாக லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்தது.
8. சிரியாவில் இட்லிப் மாகாணம் மாரெட் மிஸ்ரின் என்ற நகரில் ரஷிய படைகள் நேற்று நள்ளிரவு திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
9. இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக ரத்தானதையடுத்து இந்திய பெண்கள் அணி புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறையாக முன்னேறியது.