ஆயிரக்கணக்கான 'உயிர்களை' பலி வாங்கி... 'உலகம்' முழுவதும் பரவி நிற்கும் 'கொரோனா'... 'மருந்து' சொல்லும் 'அசாம் எம்.எல்.ஏ'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 03, 2020 10:52 AM

பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என அசாம் மாநில எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.

Assam MLA told about the medicine for Corona Virus

வங்க தேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக அசாம் சட்டமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, 'பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்' என்றார். மேலும், 'கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்திற்கு உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் கேன்சர் நோயாளிகள் மீது பசுவின் சாணத்தை தேய்க்கின்றனர். மேலும், பசுவின் சீறுநீரிலிருந்து உருவாக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பசு, வங்க தேசத்திற்கு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்' என்றார்.

சீன நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #SUMAN HARIPRIYA #MLA #ASSAM #CORONA VIRUS