'காப்பாத்துங்க ப்ளீஸ்'.. பாலியல் 'கஸ்டமராக' சென்ற நபர்.. இளம் பெண்ணுக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 11, 2019 10:36 PM

டெல்லி ஜிபி சாலையில், 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்,  பாலியல் தொழிலுக்காக, விற்கப்பட்டுள்ளதை, அங்கு விருப்பப் பட்டு சென்ற இளைஞர் ஒருவரால் மீட்கப்பட்டுள்ளார்.

Client phoned woman\'s brother to help her and COPS rescued

கொல்கத்தாவின் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவரிடம், இன்னொரு பெண், இதை விடவும் ஒரு நல்ல வேலையை பெற்றுத் தருவதாகக் கூறி வேறொரு ஆணுடன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த ஆண் நபர், இந்த பெண்ணை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்றுள்ளார்.

அதன் பிறகு அங்கு சென்ற கஸ்டமர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்து போன் பிடுங்கிவைக்கப்பட்டதாகவும், வெளியில் செல்ல முடியாமல் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். அந்த பெண்ணின் இந்த  நிலையைக் கேட்டதும், பரிதாபப் பட்டு, உதவுவதாக கூறியுள்ளார். அதற்காக அந்த பெண், தன்னுடைய அண்ணனது செல்போன் நம்பரை தந்துள்ளார்.

பின்னர், பாலியல் நகருக்கு கஸ்டமராக சென்று உதவ முன்வந்த அந்த நபர், அந்த பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து தகவலைக் கூறியுள்ளார். தங்கையை 2 நாட்கள் காணாததால் பதற்றத்தில் இருந்த அந்த அண்ணன், அந்த கஸ்டமரை உடனே சென்று சந்தித்துள்ளார். 

அவர் சொன்ன துல்லியமான முகவரிப்படி, அதன் பின்னர் போலீஸாருக்கு,  தகவல் அளித்து, தன் தங்கையை அந்த அண்ணன் மீட்டுள்ளார்.  மேலும் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு, பாலியல் தொழிலை நடத்தி வந்த குறிப்பிட்ட பெண்மணியை போலீஸார் கைது செய்துமுள்ளனர்.

Tags : #BROTHEL #DELHI