பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது.. ‘துப்பாக்கி முனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 29, 2019 08:32 PM

டெல்லியில் இளம் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Man arrested for raping 22 year old girl at gunpoint in Delhi

டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சவான் என்ற நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே சவானுடன் வேறு சில நண்பர்களும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜ் பார்க் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சவான் என்ற அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DELHI #GUNPOINT #BIRTHDAY #CELEBRATION #GANG #RAPE