ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 07, 2019 04:50 PM

ஓடும் ரயிலில் பெண் சிறைக்கைதி ஒருவரை காவலுக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tihar jail inmate raped by police constable on moving train

கடந்த 3ஆம் தேதி திஹார் சிறையைச் சேர்ந்த பெண் கைதி ஒருவரை ஒரு கான்ஸ்டபிள் மற்றும் 2 பெண் காவலர்கள் கொண்ட குழு ஒன்று மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது. அங்கிருந்து மீண்டும் அவரை டெல்லிக்கு திருப்பி அழைத்துச் செல்லும்போது ரயிலில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.

அதற்காக கூட்டிச் சென்றபோது காவலுக்கு இருந்த இரண்டு பெண் காவலர்களையும் தங்கள் இடத்திற்கு போகுமாறு உடன் இருந்த கான்ஸ்டபிள் கூறியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு கழிவறைக்குள் சென்ற அவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என அந்தப் பெண்ணை அவர் மிரட்டியுள்ளார்.

சிறைக்குத் திரும்பும் வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சிறை மருத்துவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #DELHI #TIHAR #JAIL #FEMALE #PRISONER #CONSTABLE #RAPE #TRAIN