'உங்கள இது ரொம்ப மிஸ் பண்ணும் மகி'.. நெகிழ வைத்த சாக்ஷி தோனி.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 11, 2019 09:12 PM
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தற்போது ராணுவ பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

வரும் 15-ஆம் தேதிக்கு பிறகு இந்திய அணியில் இணைந்து, கிரிக்கெட் விளையாடத் தொடங்கவுள்ளார். இந்த ஓய்வு காலத்தில் ராணுவ நிகழ்வுகள் பலவற்றிலும் கலந்துகொண்டு உரையாற்றிய தோனி இப்போது இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகியுள்ளார். அதற்கும் ஒரு அழகான காரணம் கிடைத்துள்ளது.
ஆம், அடிப்படையில் கார் மற்றும் பைக் பிரியரான மகேந்திர சிங் தோனி, தனது காரேஜ்ஜில் புதிதாக வாங்கிச் சேர்த்துள்ள ஜீப் கிராண்ட் செரோக்கே-தான் அந்த அழகான காரணம். அந்த காரினை புகைப்படம் எடுத்து, அவரது மனைவி சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, பெராரி 599 - ஜிடிஓ, ஹம்மர் எச்-2, ஜி.எம்.சி சியாரா உள்ளிட்ட கார்கள் வைத்திருக்கும் தோனியின் வீட்டுக்கு ஒரு புது டாய் வந்துள்ளதாகவும், ‘மகி இது உங்களை மிகவும் மிஸ் செய்யும்’ என்றும் பதிவு போட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.
