‘ஒரு வழியாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 26, 2019 12:51 PM
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, தான் போட்டியிடும் தொகுதிக்கான வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதலே, பலரும் கூட்டணிக்கான வியூகங்களை வகுத்தும், புதிய கட்சிகளைத் தொடங்கியும், வேட்பாளர்களை மாற்றியும் பல விதமாக இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தொடங்கினர்.
இதேபோல் இந்தத் தேர்தலில் திரைக்கலைஞர்கள் பலரும் புதிதாக களமிறங்க்கவும், கட்சி மாறவும், ஆதரவு அளிக்கவும் செய்தனர். பிறகு தொகுதிப் பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு என அந்தந்த கட்சிகளும் பிஸியாகின. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பரப்புரை நிகழ்த்தவும் தொடங்கினர்.
இந்த நிலையில் ராகுல் காந்தியும், மோடியும் எப்போது தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியது. ஒருவழியாக ராகுல் காந்தி வடக்கில் உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும், தெற்கில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.
மிக இறுதியாக, பாஜக தேர்தல் முடிந்தாவது தொகுதி வாரியான வேட்பாளர் விபரங்களை அறிவிக்குமா என்று கிண்டலாக பலரும் கேட்கத் தொடங்கிய நிலையில், பாஜக சில வேட்பாளர் தகவல்களை வெளியிட்டது. அதன்படி, பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.