'வேலை வேணுமா'?... 'அப்போ இத பண்ணு'...நடுரோட்டில் வைத்து 'நையப்புடைத்த பெண்கள்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 28, 2019 11:12 AM

கலெக்டர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி, வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை படுக்க அழைத்த நபரை பெண்கள் அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virudhunagar woman beating a pervert man video goes viral

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தன்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். ஆண்கள் என்றால் பணத்தை கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்றும், பெண்களிடம் படுக்கைக்கு அழைத்தும் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனிடையே  வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பெண்களை அழைத்து அவர்களை அலைய வைத்துவிட்டு இறுதியில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சிலரை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏமாற்று பேர்விழியின் தொல்லைக்கு ஆளான பெண் ஒருவர், தனது தோழியிடம் விவரத்தை சொல்ல அந்த பெண்ணுக்கும் அந்த நபர் செல்போனில் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதனிடையே ஏமாற்று பேர்விழியை  பொறிவைத்து பிடிக்க நினைத்த பெண்கள், சம்மதம் தெரிவிப்பது போல நடித்து அந்த நபரை வீட்டிற்கு வரவழைத்த பெண்கள், ஆசையுடன் வந்த அவரை ஓட ஓட விரட்டி தாக்கினர், தகவல் அறிந்த அந்தபகுதி இளைஞர்களும் அந்த நபரை புரட்டி எடுத்தார்கள். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #SEXUALABUSE #ATTACKED #BEATING #PERVERT #VIRUDHUNAGAR