‘திடீரென ரயில் நிலையத்தில்’.. ‘வெடித்துச் சிதறிய பார்சலால் பரபரப்பு’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 21, 2019 08:16 PM

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் திடீரென பார்சல் ஒன்று வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Box Explodes At Railway Station In Karnatakas Hubballi 2 Injured

தென் மேற்கு ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில் யாரும் பெற்றுச் செல்லாத பார்சல் ஒன்று இருந்துள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த அந்த பார்சலை ஹுசைன் என்ற நபர் பிரிக்க முயன்றபோது திடீரென  வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு ஹுசைன் மற்றும் உடனிருந்த மற்றொருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுயடுத்து அவர்களை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடித்துச் சிதறிய பார்சல் எங்கிருந்து வந்தது, யாருக்காக அனுப்பப்பட்டது என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KARNATAKA #HUBBALLI #PARCEL #BOX #EXPLOSION #RAILWAYSTATION