‘பப்ஜி கேம் விளையாடியதை’... ‘கண்டித்த போலீஸ் தந்தை’... ‘குடும்பத்தை அடைத்து வைத்து’... ‘மகன் செய்த கொடூரச் செயல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 09, 2019 08:39 PM

பப்ஜி கேம் விளையாடியதைக் கண்டித்த தந்தையை, அவரது மகன் 3  துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man forbids son to play PUBG game, gets beheaded

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் காகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் தேவப்ப கும்பர். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்னர்தான், காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு  21 வயதான பாலிடெக்னிக் படிக்கும் ரகுவீர் கும்பர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் எந்நேரமும் பப்ஜி கேம் விளையாடிய தனது மகன் ரகுவீர் கும்பரை, அவரது தந்தையான சங்கர் கண்டித்துள்ளார். மேலும் மகனை தாக்கியதாகத் தெரிகிறது. பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, மகனின் செல்போனை பறித்த அவர், இண்டர்நெட் சேவையை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓர் அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, தனது தந்தையை மூன்று துண்டுகளாக வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலைசெய்ததாக கூறப்படும் ரகுவீர் கும்பருக்கு மன நல பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், கொலை தொடர்பாக அவரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பப்ஜி கேம் விளையாடுவதைக் கண்டித்ததால் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் இதுபோன்ற கொலைச் சம்பவம் முன்னதாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #PUBG #GAME #KARNATAKA #BEHEADS #SONANDFATHER