‘சாராயம் குடிச்சாலே போதும்...’ ‘கொரோனா வைரஸ்லாம் கிட்டக்கூட வராது...’ வதந்தியை நம்பி குடித்த அப்பாவி மக்களின் பரிதாப நிலை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 09, 2020 09:47 PM

ஈரானில் கோவிட்-19 என்று பெயரிடப் பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதியால் வதந்திகளை நம்பி ஆல்கஹால் குடித்து 27 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Innocent people drink that the corona virus would not attack

சீனாவில் வுஹான் மாகாணத்தில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் பல நாடுகளை அச்சமடைய  செய்துள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 3500 பேர் உயிரிழுந்துள்ளார். சீனாவை தொடர்ந்து ஈரான் நாட்டில் இவ்வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்பும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. மேலும், ஈரானின் முன்னாள் தூதரக அதிகாரி ஹூசேன் ஷேக்லெஸ்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்

தற்போது ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் தாக்காது என்கிற வதந்தி வைரஸை காட்டிலும் மிக வேகமாக ஈரானில் பரவி வருகிறது. ஈரானில் ஆல்கஹால் தடைச் செய்யப்பட்ட ஒரு திரவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வதந்தியை நம்பிய அப்பாவி மக்களில் சிலர் அவர்களாகவே மெத்தனாலைத் (எரி சாராயம்) தயார் செய்து குடித்துள்ளனர்.

எரி சாராயம் குடித்த மக்களில் 27 பேர் தற்போது உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது. மேலும்  218 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வரை ஈரானில் 237 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 47 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், ஈரான் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையைக் காலவரையின்றி ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நினைத்து மெத்தனாலை குடித்து உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று ஈரானில் அஹ்வாஸ் மருத்துவக் கல்லூரி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags : #METHYL