'கொரோனாவை' கட்டுப்படுத்த 'கோமியம்' பார்ட்டி... 'விஞ்ஞானிகளை' வியக்க வைத்த இந்தியன் 'வேக்சினேஷன்'... ஒரு கல்ப் அடிச்சா போதும்... 'வூகானுக்கே' 'டூர்' போகலாம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 05, 2020 01:25 PM

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த கோமியம் பார்ட்டி நடத்த இருப்பதாக இந்து மகாசபா தலைவர் சக்ரபானி மகாராஜ் கூறியுள்ளார்.

hindu mahasabha to organise cow urine a party

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் தன் கால்த்தடத்தை பதித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் 28 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ்க்கு மாட்டு கோமியம் சிறந்த மருந்து என்று இந்து மகாசபா தலைவர்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மகாசபா தலைவர் சக்ரபானி மகாராஜ், கொரோனாவை கட்டுப்படுத்த மாட்டு கோமியம் பார்ட்டி நடத்த உள்ளதாக கூறியுள்ளார். ”டீ பார்ட்டிகளைப் போல கோமியம் பார்ட்டி நடத்த இருக்கிறோம். இதில், கொரோனா எப்படி பரவுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்படும்" எனக் கூறியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் கோமியம் வழங்குவதற்காக தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் கோமியத்துடன், மாட்டுச் சாணம் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால், வைரஸ் முற்றிலுமாக அழியும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #COVID-19 #COW URINE #PARTY #HINDU MAHA SABHA