இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 06, 2020 06:42 PM

1. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

important headlines read here for Evening March 6

2. நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்தால், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும். ஆடு, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து, கொரோனா வைரஸ் பரவாது' என, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

3. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ரவீஸ் குமாருக்கு பதில், அனுராக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவீஸ் குமார், ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

5. யெஸ் வங்கியின் ஊழியர்களின் பணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

6. இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயக்கப்படும் ராமாயண சுற்றுலா ரயில் சேவையை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கொடியசைத்து துவக்கி வைத்தார்.

7. கொரோனா வைரஸ் பொது மக்களை தாக்கி வரும் நிலையில், இதனை வைத்து மொபைல் போன், கம்ப்யூட்டர்களுக்கு போலி பி.டி.எப்., பைல்களை அனுப்பி, தகவல் திருடும் சம்பவங்களும் அரங்கேறி வரும், அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

8. ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர் என விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கிருந்து மீண்டும் திரும்பும் விமானத்தில் இங்குள்ள ஈரானியர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் கூறினார்.

9. கொரோனா பாதிப்பின் தீவிரம் தெரிந்தும், உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்  கவலை தெரிவித்து உள்ளார்.

10. தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் சவரன் ரூ.872 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.33,848ஆக எட்டி உள்ளது.

Tags : #PARLIAMENT #CORONA #NIRBHAYA #NIRMALASITHARAMAN #WHO #IRAN #GOLD RATE