’20 கத்தி குத்துகள்... மரணம் பயம்...’ - மனைவியின் ’சமயோஜிதத்தால்’, திருடர்களிடமிருந்து ‘போராடி’ தப்பிய இளம் IT ஊழியர்! - நெஞ்சை உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் நெடுஞ்சாலையில் செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் வீர சாகசம் புரிந்து தங்களை காப்பாற்றிக் கொண்ட தம்பதிகளின் வாக்குமூலம் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளது.

கர்நாடக தலைநகரான பெங்களூரில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும், அவரது மனைவியும் கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஹெப்பல் ஃப்ளைஓவர் அருகே சிக்கமங்களூரு நோக்கி பயணித்துள்ளனர்.
இந்நிலையில் 20 வயதை கடந்த இரு நெடுஞ்சாலை கொள்ளையர்கள், இருவரிடம் இருந்து கத்திமுனையில் கொள்ளையடிப்பதை கண்டுள்ளனர். அதனால் அவர்களை காப்பாற்ற வேண்டும் என நினைத்த இந்த தம்பதிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இந்நிலையில் பைக்கில் இருந்த இரண்டு கொள்ளையர்கள் இவர்களை நோக்கி வந்து காரில் இருந்த ஆணை கத்தியால் முகத்திலேயே தாக்கியுள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவரது மனைவி காரின் ஆக்சிலேட்டரை அழுத்தி கொள்ளையர்கள் வந்த பைக்கை துவம்சம் செய்துள்ளார்.
படுகாயம் அடைந்த கொள்ளையர்கள், 'எங்க பைக்கை விட்டுட்டு இப்படியே பெங்களூரு ஓடிடுங்க' என தம்பதிகளை மிரட்டியுள்ளனர். எதற்கும் பயப்படாத அந்த தம்பதிகள் திருடர்களிடம் போராடி அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை மீட்டுள்ளனர். இதனால் அந்த நபருக்கு 20 இடங்களில் கத்திகுத்தும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தம்பதிகள் இருவரும் ஃப்ளைஓவர் அருகே இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொடிஜஹள்ளி போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கூறிய போது, 'கொள்ளையர்களைப் பார்த்ததும் நானும் என் மனைவியும் உடனடியாக பயங்கரமாக கத்தி கூச்சலிட்டோம். எங்களை பார்த்ததுமே திருடர்கள் பைக்கை திருப்பி எங்களை நோக்கி நகர்ந்து வந்தார்கள். கையில் கத்தியுடன் வந்த அவர்களில் ஒருவன், கார் கதவின் அருகே வந்து, கார் சாவியை பறிக்க முயன்றான். நான் அவனைத் தடுக்க முயன்றபோது, அவன் என்னை கத்தியால் முகத்தில் பல முறை தாக்கினான். மேலும் என் முகம், கழுத்து மற்றும் கைகளில் தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள்' என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
