"வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருடிய பொருட்கள் மற்றும் நகைகளை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்து பதிவிட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

டிக்டாக்கின் மேல் உள்ள அதீத ஆர்வத்தில் பெண் ஒருவர் தான் திருடிய நகை உள்ளிட்ட பொருட்களை வீடியோ எடுத்து வைத்து டிக்டாக்கில் பதிவிட்டு வசமாக சிக்கிக்கொண்டார். அசாமின் கவுகாத்தியில், வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரை பார்த்துக்கொள்வதற்காக, உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட சுமி கலிதா என்கிற பெண் பணியமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில் சுமி கலிதா, ஒருநாள் வீட்டில் ஒரு மூலையில் இருந்த வாட்ச் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு லக்கிம்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அந்த பெண்ணை தேடிப் பார்த்து, எந்த முயற்சிகளும் பலன் அளிக்காததால் அந்த பெண்ணை தேடுவதை நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில்தான் அண்மையில் அந்த பெண், அந்த மூதாட்டியின் வீட்டில் தான் திருடிய நகை மற்றும் வாட்சை அணிந்துகொண்டு டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டு சிக்கிக் கொண்டார். இந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, அந்தப்பெண் அனாமிகா என்கிற பெயரில் டிக்டாக் வீடியோவை பதிவிட்டு வந்ததைப் பற்றி போலீசில் புகார் அளித்தனர். இதனால் டிக்டாக் ஐடியை வைத்து அந்த பெண்ணை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
