'மகனை கொன்னு பிளாஸ்டிக் பையில அடைத்த அம்மா...' அட கடவுளே...! இதுக்கெல்லாமா பெத்த புள்ளைய கொலை பண்வாங்க...?!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jul 10, 2020 11:27 AM

தன் 11 வயது மகன் இரவு பகல் பாராமல் செல்போனில் கேம் விளையாடியதால் தாயே மகனை கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

brazil mother kills 11 year old son beacause play game on mobile

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி என்ற பெண்மணி திருமணமாகி விவகாரத்தானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரில் 11 வயதுடைய ரஃபேல் என்னும் குழந்தை 10 நாட்களாக காணவில்லை மேலும் இதுபற்றிய புகாரையும் அலெக்ஸாண்ட்ரா போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தான் அலெக்ஸாண்ட்ராவின் வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேரேஜில் இருந்த அழுகிய சடலத்தை மீட்டு ஒருவாரமாக விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் இறந்த சடலம் சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்தது

இதனை தொடர்ந்து ரஃபேல் தாய் அலெக்ஸாண்ட்ராவிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளார். மேலும் தன் நடத்தையில் சந்தேகம் அடைந்து வாக்குவாதத்தில் மகன் வீட்டை விட்டு சென்று விட்டான் எனக்கூறி, போலீசாரின் விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால் வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில், ஸ்னிஃபர் நாய்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

தன் மகன் இரவு பகல் எனப்பாராமல்  செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனை தான் எப்போதும் கண்டித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பும், மகன் ரஃபேலிடம் தாய் டகோகென்ஸ்கி, ‘செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட வேண்டாம்’ என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார். இதனால் கேட்காததால் ஆத்திரத்தில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் சடலத்தை என்ன செய்யவேண்டும் என தெரியாமல், மறைத்து வைக்கும் வகையில் மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தார். பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) கொண்டு சென்று மறைத்து வைத்துவிட்டார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பின் அழுகிய சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசவே உண்மைகள் அம்பளமாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மகன் ரஃபேல் தனது தாய்க்கு அனுப்பிய மெசேஜில், தன்னையும் தனது சகோதரரையும் கவனித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். தாயின் அன்பு குறித்து புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் மட்டுமல்லாமல் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Tags : #CRIME #MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil mother kills 11 year old son beacause play game on mobile | World News.