'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபில் ஒரு திருடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 17 காவல்துறையினர் மற்றும் நிதிபதி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி பைக் திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்களை பொதுமக்களின் உதவியுடன் காவல்துறையினர் பிடித்து சிறைவைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுள் ஒருவருக்கு தொடர்ச்சியாக இருமல் ஏற்படவே மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பரிசோதனையின்போது ஒருவர் காவலர்களிடமிருந்து தப்பிச் சென்றார். இன்னொருவருக்கு கொரோனா இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, தப்பிச் சென்ற நவ்ஜோட் சிங் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். அவ்விருவருடன் தொடர்பிருந்த காவல்நிலைய அதிகாரி முகமது ஜமீல் உள்ளிட்ட 17 காவல்துறையினரும், நீதிபதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
