'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசாருக்கு' கொரோனா...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் 6 பேருக்கு கொள்ளையன் ஒருவன் மூலம் கொரோனா பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவனை கைது செய்தனர். அவன் அளித்த தகவல் மூலம் மற்றொருவனையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் சிறை நிர்வாகத்தினர் நடத்திய சோதனையில் 2 கொள்ளையர்களில் ஒருவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற செய்திகள்
