'அதிகாலை' நேரம் ... குடியிருப்பில் கேட்ட இளம்பெண்ணின் 'கதறல்' ... திருடனால் நேர்ந்த விபரீதம்! ... ஊரடங்கிலும் அடங்காத கொடூரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 10, 2020 04:09 PM

சென்னை திருமங்கலம் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா. இவர் தனது மனைவியுடன் அதே குடியிருப்பில் தங்கி வருகிறார். நேற்றிரவு, பணிக்காக குடியிருப்பின் வாசலில் இருந்த கிருஷ்ணா தூங்கியுள்ளார். அவரது மனைவி லிப்ட் அறையில் தூங்கியுள்ளார்.

Thief sexually assualted a girl in Chennai early morning

இந்நிலையில் அதிகாலை நான்கு மணியளவில் மர்ம நபர் ஒருவர் கிருஷ்ணாவின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து தப்பித்து வந்த மனைவி தனது கணவரிடம் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து காவல் நிலையம் சென்று கிருஷ்ணா புகாரளித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்த போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராமகிருஷ்ணன் அண்ணாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை பால் விநியோகம் செய்வது போல சென்று சுவரேறி குதித்து திருடுவதை வழக்கமாக கொண்டவர் என்பதும், அதே போல இந்த குடியிருப்பில் திருட வந்த ராமகிருஷ்ணன், தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணாவின் மனைவியைக் கண்டதும் அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசாரிடம் பிடிபட்ட ராமகிருஷ்ணன் கூறுகையில், பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது போல அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வேன். அப்போது திருடுவதற்கு அந்த அடுக்குமாடியின் சுவர் ஏறி குதித்து மொட்டை மாடிக்கு சென்றேன். அப்போது லிப்ட்டின் பக்கத்திலிருந்த அறையின் கதவு திறந்திருந்தது. அதற்குள் இளம்பெண் ஒருவர் தனியாக தூங்கி கொண்டிருந்தார். ஆராய்க் கண்டா எனது மனம் மாறியது. இதனால் அவரிடம் தவறாக நடக்க முடிவு செய்தேன். உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர், கத்த முயன்றார். நான் கத்தியை காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடப் போன இடத்தில் இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்ப்குதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.