'ஹைடெக்காக மாறிய பெங்களூர் ஏர்போர்ட்...' 'இதெல்லாம் பண்ணி அசத்திருக்காங்க...' யாரையும் கான்டேக்ட் பண்ண தேவையில்லை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் விமானங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் பரவா வண்ணம் அதிநவீன நடைமுறைகளை உருவாக்கி உள்ளது பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்.

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் இந்த சூழலில் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து தங்களது ஊழியர்களையும், பயணிகளையும் காக்கும் பொருட்டு பெங்களூரு விமான நிலையம், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்பில்லாத ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
விமானத்தில் பயணிக்கவிரும்பும் நபர் முதலில் தன்னுடைய உடல் நிலை குறித்து மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்கிய சேது ஆப் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே தான் விமான நிலையத்தில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார். அவரின் உடல்நிலை வெப்பத்தை பரிசோதிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் அடையாள அட்டை, விமான போர்டிங் பாஸ் ஆகியவை விமான நிலையத்தில் காணப்படும் செயலியை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. அதன் பின்னரே அவர் அனுமதிக்கப்படுகிறார். மேலும் அவரின் சூட்கேஸும் விமான நிலைய ஊழியர்களின் கைப்படாமல் அதற்கு தனியே டேக் கொடுக்கப்பட்டு பொருட்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த அனைத்து செயல்முறைகளில் பயணிப்பவர்களுக்கு, ஊழியர்களுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லாமல் தகுந்த பாதுகாப்பு முறைகளோடு செயல்படுத்துகின்றனர்.
இம்மாதிரியான செயல்முறை பிற விமான நிலையங்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பயணிகள் மற்றும் தங்களின் ஊழியர்களின் நலனை கொண்டு செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
