'பேயைப்' பார்த்து கூட இப்படி 'பயந்து' ஓடியதில்லை... 'சீனர்களைக்' கண்டு பயந்து ஓடிய கார், ஆட்டோ 'ஓட்டுநர்கள்'...! 'ஆந்திர' விமான நிலையத்தில் நிகழ்ந்த 'வேதனை' சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் சீனாவிருந்து ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன பயணிகளை கண்டு கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சத்தில் பயந்து ஓடினர்.
ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா விமான நிலையத்தில் சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்து இறங்கினர். அவர்கள் தங்கும் இடத்திற்கு செல்ல ஆட்டோ, டாக்சி நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சீனர்களைக் கண்ட ஓட்டுநர்கள் அச்சத்தில் பேயைக் கண்டது போல் தெறித்து ஓடியுள்ளனர். அவர்களை யாரும் அழைத்துச் செல்ல முன்வரவில்லை.
இதனிடையே ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களும், பொதுமக்களும் உதவ முன்வராததால் சீனப் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், 15 பேரும் பெங்களூரு விமான நிலையம் வழியாக ரேணிகுண்டா வந்தது தெரியவந்தது.
பின்னர் விமான நிலையத்தில் உரிய சோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் உறுதி செய்த பின்னர், 15 பயணிகளும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.