'ராஜா போல கெத்தா இருந்தியே'...'யானையின் சோக முடிவு'...அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 18, 2019 03:00 PM

ஊருக்குள் புகுந்து யானை தும்சம் செய்த போதிலும், அந்த யானையின் சோக முடிவு கிராம மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

Assam Rogue Elephant Bin Laden Dies After Six Days In Captivity

அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள ரோங்ஜலி வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று 2 வாரத்திற்கு முன்பாக ஊருக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்களின் குடிசைகளை அழித்து, மக்களை அச்சுறுத்தியது. அதோடு 5 பேரையும் யானை மிதித்து கொன்றது. இதனால் பயத்தில் உறைந்த அந்த பகுதி மக்கள், யானையை உடனே பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மதம் பிடித்த யானைக்கு அந்த பகுதி மக்கள் 'ஒசாமா பின் லேடன்' என்று பெயர் சூட்டினார்கள்.

இதையடுத்து பின்லேடனை பிடிக்க ஆளில்லா விமானம், கும்கி யானை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கினார்கள். அந்த முயற்சியின் பலனாக யானை ஒசாமா கடந்த 11-ம் தேதி பிடிக்கப்பட்டான். யானை பிடிக்கப்பட்டு அது அமைதியானதால், அதனை கிருஷ்ணா என்று அந்த பகுதி மக்கள் அன்போடு அழைத்தனர். இந்த சூழ்நிலையில் யானையை காட்டுக்குள் விடலாம் என வனத்துறையினர் கருதிய நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

யானை மீண்டும் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சம் அந்த கிராம மக்களிடம் இருந்தது. இதனால், யானை தொடர்ந்து உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில்,  இன்று காலை 5.30-க்கு யானை ஒசாமா உயிரிழந்தது. இது அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த போதிலும் அந்த யானையின் பிரிவு அந்த கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யானையின் வழித்தடங்கள் அளிக்கப்படுவதால் அது ஊருக்குள் வரும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், யானை லேடனின் இறப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags : #ASSAM ELEPHANT #BIN LADEN #DIES #GOALPARA