'இந்த' மாநில பொண்ணுங்கள 'கல்யாணம்' பண்ணிக்கிட்டா... கவர்மெண்டே ₹40 ஆயிரம் 'பணம்' கொடுக்குமாம்... ஆனா ஒரு கண்டிஷன்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 21, 2020 01:50 AM

அசாமில் வசிக்கும் பெங்காலி பெண்களை திருமணம் செய்து கொண்டால் ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

Assam Government give 40 Thousand to Marry Bengali Girl

அசாமில் உள்ள பெங்காலி இந்து பெண்கள் அல்லது ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை உள்ளூர் அதாவது அசாம் மக்கள் மத்தியிலிருந்து தேர்வு செய்தால் அவர்களுக்கு ரூ40 ஆயிரம் ரொக்கம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகப் பரிசாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக பெங்காலியில் இருந்து அசாமிற்கு வந்த மக்களும், அசாமில் பூர்வீகமாக உள்ளவர்களும் திருமணம் செய்துகொள்ள நிறைய எதிர்ப்பு உள்ளது. அப்படி ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தங்கள் பெற்றோரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். சமூகமும் அவர்களை கண்டுகொள்வது இல்லை.

இதனால் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இந்த ரொக்கப்பரிசு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags : #ASSAM