'ஒரே ஒரு நிமிஷம் போதும்...' 'ஈஸியா பான் கார்டை ஆதாருடன் லிங்க் பண்ணிடலாம்...' எப்படி லிங்க் பண்ணனும் தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 03, 2020 10:50 AM

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இம்மாத இறுதிக்குள் இணைக்காவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.

Instructions for Connecting a Pan Card to Aadhaar

பான் கார்டையும் ஆதார் கார்டையும் மார்ச் 31-ம் தேதிக்குள்  இணைக்காவிட்டால் பான் கார்டுகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என வருமான வரித்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. அவ்வாறு செயலிழந்து போகும் பான் கார்டுகளின் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி 10,000 ரூபாய் அபராதம் விதிப்பார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபராதத்தை செலுத்தியபிறகு உடனடியாக பான் கார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தை தவிர்க்க எளிதாக ஆன்லைன் மூலமாக இணைத்து விடலாம்.

பான் கார்டை ஆதாருடன் இணைக்க : 

1. incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதில் Quick Links என்பதற்கு கீழ் இருக்கும் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

4. ஏற்கெனவே பான் எண்ணை ஆதாருடன் நீங்கள் இணைந்திருந்தால் அது குறித்த தகவல் காண்பிக்கும்.

Tags : #PANAADHAR