‘வில்வித்தை பயிற்சி’.. குறி தவறி சிறுமியின் கழுத்தில் குத்திய அம்பு..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jan 10, 2020 06:05 PM
வில்வித்தை பயிற்சியின் போது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சபுயா என்ற இடத்தில் விளையாட்டு பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு குறி தவறி எதிர்பாராத விதமாக ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையை துளைத்து கழுத்து வரை பாய்ந்துள்ளது. உடனே சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வில்வித்தை பயிற்சியாளர் கேலோ இந்தியா யூத் என்ற விளையாட்டு போட்டி நடக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.