'மரணம் நிச்சயம்' என்று தெரிந்தே செல்லும் 'மருத்துவர்கள்'... 'சீனர்களின்' அர்ப்பணிப்பு மிகுந்த 'போராட்டம்'... 'கண்ணீருடன்' வழியனுப்பும் 'உறவுகள்'... 'வைரல் வீடியோ'..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 03, 2020 05:50 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் மருத்துவர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பிவைக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Doctors who know that they will die - Relatives of tears

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சீனாவின் பல்வேறு நகரங்களிலிருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் எனப் பலர்  வுகான் நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படிச் செல்லும் தன்னார்வலர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது என்பதால் வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் ஏற்படுவது நிச்சயம் எனத் தெரிந்தே மருத்துவர்கள் சிகிச்சையளிக்க செல்கின்றனர். தங்களின் அன்பிற்குரியவர்கள் திரும்ப வரப்போவதில்லை எனத் தெரிந்தே அவர்களின் உறவினர்கள் மருத்துவர்களை வழியனுப்பி வைக்கிறார்கள். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags : #CHINA #CORONA #CORONA VIRUS #WUHAN #DEDICATED DOCTORS