'கொரோனாவின்' தீவிரம் புரியணுமா?... 'மீம்ஸ் பாய்ஸ்' இதைப் பாருங்க ... 'கதறி அழும்' சீன பெண் மருத்துவர்... 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 02, 2020 08:56 AM

கெரோனா குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நாம், வைரஸ் பாதிப்பால் சீனா எத்தகைய தீவிர பாதிப்புகளை அடைந்துள்ளது என்பதை இந்த ஒரு வீடியோ  மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

A video of a Chinese female doctor crying - viral on the intern

சீனாவில் தோன்றி தற்போது உலகின் 21 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் உலகின் தற்போதைய முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார மையம், உலகம் முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்பதை புரிந்துகொள்ளாமல் நம் நாட்டினர் வழக்கம் போல் மீம்ஸ் போட்டு கலாய்து வருகின்றனர். 

தற்போது சீனாவில் நிலைமை மிக மோசமாகியுள்ளது. அங்கு கொரோனாவின் பாதிப்பை செய்தியாக மட்டுமே கேள்விப்பட்டு வந்த நாம் தற்போது ஒரு உணர்ச்சிப் பூர்வமான வீடியோ மூலம் அதனை உணர்ந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. செய்திகள் நம்பகத் தன்மையை இழக்கலாம். ஆனால் இந்த பெண் மருத்துவரின் உணர்வுப்  பூர்வமான கதறல் உண்மையை உலகம் முழுவதும் உரக்க பறைசாற்றுகிறது.

இரவு பகலாக தூக்கம் இன்றி நோயாளிகளை கவனித்து வரும் இந்த மருத்துவர் உண்மை நிலையை தன் கண்ணீர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது கைகளில் டிஷு பேப்பர் வைத்துக்கொண்டு தன்னால் இனி முடியாது. இங்கு போதுமான வசதிகள் இல்லை என்றபடியும் அவர் அழுது கொண்டே கூறுகிறார். சக மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.  இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : #CHINA #CORONA VIRUS #CHINESE DOCTOR #CRYING #VIRAL VIDEO