2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள்...! 'இன்னும் 10 நாட்களுக்கு...' 'சொந்த ஊர்களுக்கு அனுப்ப...' மத்திய இரயில்வே துறை அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொருளாதார தேவைக்காக வேற்று மாநிலத்திற்கு வந்த தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் முயற்சியில் இதுவரை 36 லட்சம் மக்கள் தங்களின் ஊர் சென்று சேர்ந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய இரயில்வே துறை.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாட வாழ்விற்கு தேவையான அடிப்படை பொருட்களுக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்டப்பட்டு வந்தனர்.
பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது.
அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு இரயிலை இயக்கியது. இதன் மூலம் கடந்த 23 நாட்களில் 2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரை அடைந்துள்ளனர்.
பின்னுக்கு ஒரு சில தொழிலாளர்கள் அவதியுற்று வருவதால் அவர்களையும் சொந்த நிலத்திற்கு அனுப்ப மேலும் 10 நாட்களுக்கு சுமார் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருக்கும் தொழிலாளர்களையும் பஸ் மற்றும் இரயில் மூலமும் வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் இலவசமாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்தியன் இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
