‘கொரோனா’ அச்சுறுத்தலால்... ‘மார்ச் 31’ வரை அனைத்து பயணிகள் ‘ரயில்’ சேவை ‘ரத்து’... ‘விவரங்கள்’ உள்ளே...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 22, 2020 04:04 PM

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Coronavirus All Passenger Trains Cancelled Till March 31

உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் இந்தியாவில் இதுவரை 324 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பிடித்தம் இருக்காது என ரயில்வே அறிவித்திருந்தது. அத்துடன் மார்ச் 21ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை திரும்பப் பெறுவதிலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு குறைந்த பயணிகளின் வருகையால் 100-க்கும் அதிகமான ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என்றும், புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில்களும் இன்று இரவு வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் ரயில்களில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : #INDIANRAILWAYS #METRO #CORONAVIRUS #TRAIN #CANCELLED