‘ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’... ‘ஆனால், இதிலிருந்து மட்டும் தான் புக் செய்ய முடியும்’... வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மற்றும் விமான பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு, கடந்த 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, ரயில், விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்ரல் 15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும்' என்று கூறியுள்ளார். SpiceJet, GoAir, IndiGo போன்ற தனியார் நிறுவனங்கள் உள்ளூர் சேவைகளை மட்டும் வழங்க முன்பதிவு தொடங்கியுள்ளதாக கூறப்பட்டபோதிலும், இதுகுறித்து விமான நிறுவனங்களில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.