'லிவிங் டு கெதர்ல இருக்கும் போது இனிக்குது, இப்போ கசக்குதா?'... 'காதலி வச்ச ட்விஸ்ட்'... 'அதிர்ந்து போன காதலன்'... எமனாக மாறிய தோசைக் கல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 23, 2020 05:56 PM

காதலித்து வந்த இருவர் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், காதலி கொடுத்த அதிர்ச்சியால் காதலன் தோசைக் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bangalore man arrested for killing live-in partner

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் திப்பேசாமி. 26 வயது இளைஞரான இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரேயை சேர்ந்த நயனா என்ற, 24 வயது இளம் பெண், திப்பேசாமியின் காரில் அவ்வப்போது பயணம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில்  இருவரும் லிவிங் டு கெதரில் செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 4 மாதமாக மாரத்தஹள்ளி அருகே முனேகொலலா பகுதியில் வாடகை வீட்டில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் நயனா இல்லாமல் தனது வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்த, திப்பேசாமி நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன நயனா, எனக்கு அது போல எண்ணம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத திப்பேசாமி, திருமணம் செய்து கொள்ளலாம் என நயனாவை வற்புறுத்தியுள்ளார். அப்போது தான் தான் மறைத்து வைத்திருந்த உண்மையை நயனா போட்டு உடைத்தார். தான் வேறு ஒரு வாலிபரைக் காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத திப்பேசாமி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

நாம் லிவிங் டு கெதர்ல இருக்கும் போது உனக்கு எல்லாம் இனிப்பா இருந்தது, ஆனால் கல்யாணம் என்று வரும் போது கசக்கிறதா எனக் கேட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து திப்பேசாமியை நயனா குத்தியுள்ளார். இதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நயனாவின் கையிலிருந்த கத்தியை அவர் தட்டி விட்டுள்ளார். உடனே சமையல் அறைக்கு ஓடிய நயனா, அங்கிருந்த தோசைக் கல்லை எடுத்துக்கொண்டு திப்பேசாமியை தாக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தோசைக் கல்லை நயனாவிடம் இருந்து பிடுங்கி அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த நயனா பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தலைக்கேறிய ஆத்திரத்தில் காதலியைக் கொன்று விட்டோமே என அழுத திப்பேசாமி, மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற தனது காதலியான நயனாவை கொலை செய்து விட்டதாகக் கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தார்கள். 

இதைத்தொடர்ந்து போலீசார், முனேகொலலாவுக்கு சென்று நயனாவின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திப்பேசாமியை காதலித்துவிட்டு, வேறொரு வாலிபரைத் திருமணம் செய்யப்போவதாக நயனா கூறியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

ஒரே வீட்டில் கணவன், மனைவி போன்று வாழ்ந்த காதலர்களின் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangalore man arrested for killing live-in partner | India News.