‘முதல்வரின் கோரிக்கையை ஏற்று’... ‘மத்திய அரசு நடவடிக்கை’... 'ஆனாலும், இந்த 2 நாளைக்கு மட்டும் சேவை இருக்கும்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று, வரும் 31-ம் தேதி வரை 31-ந்தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் பல வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி மத்திய ரயில்வே துறை, டெல்லி-சென்னை மற்றும் சென்னை-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 13-ந் தேதியில் (இன்று) இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
ஆனால் சென்னையில் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை 11-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போதும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று, மே 31-ந் தேதி வரை தமிழகத்திற்கு ரயில் சேவை கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (மே 14 மற்றும் 16-ந்தேதி) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் தவிர, இதர வழக்கமான ரெயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
