ரயிலில் வந்த தொழிலாளர்கள்!.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் இருந்து ஒடிசாவுக்கு ரெயிலில் வந்த தொழிலாளர்கள் 20 பேர் தனிமை முகாமுக்குச் செல்வதைத் தவிர்க்க ரயிலில் இருந்து குதித்துத் தப்பி ஓடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் தற்போது வரை பதிவான தொற்று எண்ணிக்கை 294 ஆகும். அவற்றில் 63 குணமாகி 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று.
இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒடிசாவுக்கு வந்த ரெயில், பெனகாடியா என்னும் ஊரில் ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது அதில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து ஓடினர். இதையறிந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களை அங்குள்ள முகாமில் தனிமையில் வைத்துள்ளனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.
வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பதை ஒடிசா அரசு கட்டாயம் ஆக்கியுள்ள நிலையில் இவர்கள் தப்பியுள்ளனர்.
