‘அவங்கதான் கவனமா ஆடணும் நாங்க இல்ல..’ அவரு விக்கெட் எனக்குத்தான்.. போட்டி குறித்து பிரபல வீரர் நம்பிக்கை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 29, 2019 08:36 PM
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த மூன்று இடங்களைப் பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பர்மிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இந்நிலையில் இந்தப் போட்டி குறித்துப் பேசியுள்ள இங்கிலாந்து வீரர் மொயின் அலி, “இந்திய அணிக்காக விராட் கோலி ரன் சேர்க்க இங்கே வருகிறார். ஆனால் நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கே இருக்கிறேன். பல பந்துவீச்சாளர்கள் அவரை ஆட்டமிழக்கச் செய்ய சிரமப்பட்டு இருக்கலாம். ஆனால் நான் விராட் கோலியை எளிதாக ஆட்டமிழக்கச் செய்வேன். அவர் எனது நண்பர் என்பதால் நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிப்பேன்.
நாளைய ஆட்டம் எங்களுக்கு அழுத்தம் தராது. நாங்கள் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். எங்களுடன் மோதும் இந்திய அணி மீதுதான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றி பெற்றால் அவர்கள்மீது ரசிகர்கள் அன்பைப் பொழிவார்கள், பாராட்டுவார்கள். ஆனால் தோற்றுவிட்டால் இந்திய வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். அதனால் இந்தியா தான் கவனமாக விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
