நாங்களும் 'போட்டிக்கு' வருவோம்.. தினசரி '3 ஜிபி' டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 'ஜியோ'க்கு சரியான போட்டி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Nov 12, 2019 10:46 AM

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் ஜியோ அல்லாத பிற கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. ஜியோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் செல்லுபடியாக கூடிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

BSNL Rs. 997 Long-Term Prepaid Recharge Launched With 3GB Daily Data

997 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் 6 மாத காலத்துக்கு செல்லுபடியாக கூடிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா (4ஜி,3ஜி, 2ஜி), 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றை பிஎஸ்என்எல் அளிக்கிறது. நவம்பர் 10-ம் தேதி முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP உடன் இது மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

ஏர்டெல்லின் ரூ. 998 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வோடபோன், ஜியோவின் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகியவற்றுடன் இந்த நீண்டகால செல்லுபடியாகும் திட்டம் போட்டியிடும். 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் ஜியோ 3 மாத காலத்துக்கு மட்டுமே இந்த சலுகையினை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் 6 மாத காலத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்குகிறது. FUP அளவை அடைந்த பிறகு வேகம் 80kbps ஆக குறைக்கப்படும் என்றும், இந்த பிஎஸ்என்எல் திட்டத்துடன் இரண்டு மாதங்களுக்கு பர்சனலைஸ்ட் ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) நன்மை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #JIO