ஒரு 'நிமிஷத்துல' 426...மொத்தம் 11.76 லட்சத்துக்கு 'டிரெயின்ல' டிக்கெட் போட்ட கில்லாடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 16, 2019 01:28 PM

உலகத்தின் கடினமான செயல்களில் ஐஆர்சிடி-யில் டிக்கெட் பதிவு செய்வதும் ஒன்று. சாதாரணமாக ஒரு டிக்கெட் பதிவு செய்வதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு என்றால் ஒருசில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த டிக்கெட்டும் விற்றுத்தீர்ந்து விடும்.

Ahmedabad Railway agent books 426 tickets in a minute

இந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த ஏஜெண்ட் மோஸின் இலியாஸ்பாய் ஜாலியவாலா  என்னும் நபர் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், 426 டிக்கெட்டுகளை பதிவு செய்து இருக்கிறார். இந்த டிக்கெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 11.76 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அகமதாபாத் ஆர்பிஎப் போலீசார் கூறுகையில்,''30-45 நொடிகளுக்குள் இந்த டிக்கெட்டுகளை அவர் பதிவு செய்து இருக்கிறார். பொதுவாக ரெயில்வே ஏஜெண்ட்டுகள் தங்கள் பர்சனல் ஐடிக்களில் இருந்து டிக்கெட்டுகளை பதிவு செய்யக்கூடாது.ஆனால் இலியாஸ் சட்டவிரோதமான மென்பொருள்களை பயன்படுத்தி இப்படி செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்தேகத்துக்கு இடமாக 89 இ-டிக்கெட்டுகள் பதிவாகி இருந்தது.அதுகுறித்து விசாரிக்கும்போது தான் இலியாஸின் தில்லுமுல்லு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது தலைமறைவாகி விட்ட இலியாஸை போலீசார் தேடிவருகின்றனர். மேலும் மொத்தமுள்ள 426 டிக்கெட்டுகளில் 139 டிக்கெட்டுகளுக்கு உரியவர்கள் இன்னும் பயணிக்கவில்லை என்பதையறிந்த போலீசார், சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து இந்த டிக்கெட்டுகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #TRAIN #AHMEDABAD