‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 16, 2019 10:34 AM

குஜராத்தில் மனைவி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை கணவன் அவருடைய அண்ணனுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man sends nude pictures of wife to her brother father in Gujarat

குஜராத் அகமதாபாத்திலுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யாங் பர்மர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு பிறகு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பர்மர், முதல் மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று பர்மர் தனது முதல் மனைவி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அவருடைய அண்ணனுக்கும், தந்தைக்கும் அனுப்பியுள்ளார். புகைப்படத்தை அனுப்பிய பர்மர், “இது என்னால் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே” என அதனுடன் ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். மேலும் பர்மர் அந்த புகைப்படங்களை அவருடைய இரண்டாவது மனைவியின் அண்ணனுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் வந்த தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன அவருடைய அண்ணன் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #GUJARAT #AHMEDABAD #HUSBAND #WIFE #BRITHER #FATHER #NUDE #PHOTOS #WHATSAPP #SHOCKING