‘கணவரை கிண்டல் செய்த மனைவி’... ‘சண்டையிட்ட கணவன்’... ‘தாய், மகள் செய்த பதறவைத்த காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 05, 2019 06:06 PM

ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother and daughter suicide due to family issue

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் கடந்த ஞாயிறன்று காலை ரெயில் தண்டவாளத்தில் 2 பெண்கள் பிணமாக கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்கு விரைந்த சேலம் ரெயில்வே போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர்கள் ஒத்தையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையன் என்பவருடைய 36 வயதான மனைவி கண்ணகி என்பதும், இவர்களது 16 வயதான மகள் அகல்யா என்பதும் தெரியவந்தது. கடந்த சனிக்கிழமையன்று ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கண்ணையன், தனது மனைவி கண்ணகி மற்றும் மகள் அகல்யா ஆகியோருடன் சென்றுள்ளார்.

அங்கு தாய், மகள் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், ‘நீங்கள் 2 பேர் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள், கண்ணையனுக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லையா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணகி, 'அவர் சாராயம்தான் குடிப்பார். ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார்' என, கிண்டல் செய்துள்ளார். மேலும் குடிகாரனுக்கு எதற்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அந்த நபரிடம் கூறியதாக தெரிகிறது. அதன்பின்னர் கண்ணையன், தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்தவர் முன், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கண்ணையன் கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணகி, தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். பின்னர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாயும், மகளும் படுத்து கொண்டதும், அந்த வழியாக வந்த ரெயில், அவர்கள் மீது ஏறியதில் 2 பேரும் இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

Tags : #ICECREAM #MOHANUR #MOTHER #DAUGHTER #TRAIN